அண்டத்தின் மையத்திற்கு அருகில் "ஓல்ட் ஸ்மோக்கர்" என்ற பெயர் கொண்ட புதிய வகை செந்நிற இராட்சத நட்சத்திரத்தினை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இந்த நட்சத்திரத்தின் பிரகாசம் ஆனது புகை மூட்டத்தால் தற்காலிகமாக மறைக்கப் படுகிறது.
அண்டத்தின் அந்தப் பகுதியில் நட்சத்திரத்தின் வளிமண்டலத்தில் மிக அதிக தூசிப் படலத்தினை உருவாக்கக்கூடிய மேலும் பல கனமான தனிமங்கள் இருக்கக் கூடும் என்று தெளிவுபடுத்துகிறது.
அவர்கள் இது போன்ற 32 புதிதாக உருவான நட்சத்திரங்களைக் கண்டறிந்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்கள் இவற்றினை "ஒரு தொகுதியில் இதுவரையில் யாரும் கண்டறியப் படாத மிகப்பெரிய எண்ணிக்கை" என்று விவரித்துள்ளனர்.