TNPSC Thervupettagam

ககன்சக்தி போர் பயிற்சி 2018

April 10 , 2018 2424 days 733 0
  • இந்திய விமானப் படையானது (Indian Air Force-IAF) 2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் 10 முதல் 23 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் ககன்சக்தி (Gaganshakti)  எனும் மிகப்பெரிய விமான தாக்குதல் பயிற்சியை (Air combat exercise)  நடத்த உள்ளது.

  • உண்மை நேர ஒருங்கிணைப்பு (Real time coordination), குறுகிய மற்றும் தீவிரமான போர்க்கள சூழ்நிலைகளில் விமானப் படையின் சக்தியை ஈடுபடுத்துதல் மற்றும் பயன்பாட்டிற்கு பணியமர்த்துதல் ஆகியவை இப்போர் பயிற்சியின் நோக்கங்களாகும்.
  • இந்திய விமானப் படையின் போர் தொடுக்கும் திறனை (War waging capabilities) மதிப்பிடுவதற்கு இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் போர் பயிற்சியே ககன்சக்தி ஆகும். இப்போர் பயிற்சியின் போது இந்திய விமானப் படையில் முழு செயல் அமைப்பும் செயல்படுத்தப்படும்.
  • முதல்முறையாக உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் தயார் செய்யப்பட்ட இலகு ரக தாக்குதல் (Light Combat Aircraft-LCA) ஜெட் விமானமான  தேஜாஸ் விமானம்  இப்போர் பயிற்சியில் பங்கு பெற உள்ளது.
  • இந்திய விமானப் படையினை மையமாகக் கொண்டதாக (IAF centric exercise) இந்தப் போர் பயிற்சி இருப்பினும் “கூட்டு செயல்பாட்டுக் கொள்கையை” (Joint Operational Doctrine)  நினைவில் கொண்டே இப்பயிற்சி மேற்கொள்ளப்படும். இதனால் பிற இராணுவ சேவை அமைப்புகளினுடைய தேவைகளும் நிறைவேற்றப்படும்.
  • 2018-ஆம் ஆண்டின் ககன்சக்தி போர் பயிற்சியானது இரு கட்டமாக மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் கட்டமானது இந்தியாவின் மேற்கு எல்லையிலும், இரண்டாவது கட்டமானது பாகிஸ்தானுடனான வடக்கு எல்லையிலும் மேற்கொள்ளப்படும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்