இந்திய விமானப் படையானது (Indian Air Force-IAF) 2018-ஆம் ஆண்டின் ஏப்ரல் 10 முதல் 23 ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவின் பாகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளில் ககன்சக்தி (Gaganshakti) எனும் மிகப்பெரிய விமான தாக்குதல் பயிற்சியை (Air combat exercise) நடத்த உள்ளது.
உண்மை நேர ஒருங்கிணைப்பு (Real time coordination), குறுகிய மற்றும் தீவிரமான போர்க்கள சூழ்நிலைகளில் விமானப் படையின் சக்தியை ஈடுபடுத்துதல் மற்றும் பயன்பாட்டிற்கு பணியமர்த்துதல் ஆகியவை இப்போர் பயிற்சியின் நோக்கங்களாகும்.
இந்திய விமானப் படையின் போர் தொடுக்கும் திறனை (War waging capabilities) மதிப்பிடுவதற்கு இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் போர் பயிற்சியே ககன்சக்தி ஆகும். இப்போர் பயிற்சியின் போது இந்திய விமானப் படையில் முழு செயல் அமைப்பும் செயல்படுத்தப்படும்.
முதல்முறையாக உள்நாட்டுத் தொழில் நுட்பத்தில் தயார் செய்யப்பட்ட இலகு ரக தாக்குதல் (Light Combat Aircraft-LCA) ஜெட் விமானமான தேஜாஸ் விமானம் இப்போர் பயிற்சியில் பங்கு பெற உள்ளது.
இந்திய விமானப் படையினை மையமாகக் கொண்டதாக (IAF centric exercise) இந்தப் போர் பயிற்சி இருப்பினும் “கூட்டு செயல்பாட்டுக் கொள்கையை” (Joint Operational Doctrine) நினைவில் கொண்டே இப்பயிற்சி மேற்கொள்ளப்படும். இதனால் பிற இராணுவ சேவை அமைப்புகளினுடைய தேவைகளும் நிறைவேற்றப்படும்.
2018-ஆம் ஆண்டின் ககன்சக்தி போர் பயிற்சியானது இரு கட்டமாக மேற்கொள்ளப்பட உள்ளது. முதல் கட்டமானது இந்தியாவின் மேற்கு எல்லையிலும், இரண்டாவது கட்டமானது பாகிஸ்தானுடனான வடக்கு எல்லையிலும் மேற்கொள்ளப்படும்.