இந்தியாவின் ககன்யான் திட்டத்திற்கு விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக இரஷ்யாவினைச் சேர்ந்த கிளாவ்கோஸ்மோஸ் என்ற அமைப்புடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO - Indian Space Research Organisation) ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
விண்வெளி போன்ற ஒரு சூழல், பரவளைய விமானங்கள் மற்றும் விண்கலத்தில் இருப்பதற்கான பயிற்சி ஆகிய செயல்பாடுகள் இந்தியாவிற்கு வெளியே மேற்கொள்ளப் படவிருக்கின்றன.
ககன்யான் என்பது மனிதர்களை விண்ணின் சுற்றுப்பாதைக்குக் கொண்டுச் செல்லும் ஒரு விண்கலமாகும். இது விண்வெளிக்கு 3 மனிதர்களை 7 நாட்களுக்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
ISRO தனது முதலாவது மனிதர்களை விண்ணிற்குக் கொண்டுச் செல்லும் விண்வெளித் திட்டமான “ககன்யானை” 2022 ஆம் ஆண்டில் செலுத்தத் திட்டமிட்டுள்ளது.