இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (Indian Space Research Organisation - ISRO) ககன்யான் திட்டத்திற்கான வீரர்களைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் அவர்களுக்குப் பயிற்சியளித்தல் ஆகியவற்றிற்காக இந்திய விமானப் படையுடன் (IAF - Indian Air Force) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
இந்தத் திட்டம் 2022 ஆம் ஆண்டில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
IAFன் இந்திய விண்வெளி மருத்துவ நிறுவனம் (IAM - Institute of Aerospace Medicine) விண்வெளி வீரர்களின் தேர்வு மற்றும் வீரர்களுக்கானப் பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளும்.
இது ககன்யான் திட்டத்திற்கான பயிற்சிக்காக மூன்று விண்வெளி வீரர்களைக் கொண்ட 3 குழுக்களை (9 உறுப்பினர்கள்) தேர்ந்தெடுக்கவிருக்கின்றது.
2019 ஆம் ஆண்டு ஜனவரி 30 அன்று, ISRO தனது தலைமையகமான பெங்களுரூவில் மனித விண்வெளி மையத்தை அமைத்துள்ளது.
இது எதிர்காலத் தொழில்நுட்பங்களுக்குப் பரிசோதனைகள் மற்றும் செயல்முறைகளை மேற்கொள்வதற்காக இந்தியாவிற்கு என்று விண்வெளியின் ஒரு தனித்துவ நுண் ஈர்ப்பு அமைப்பை அளிக்கின்றது.