கக்போட் தீநிரல் இயங்குதளம்
September 5 , 2023
448 days
245
- சர்வதேச நாடுகளின் சட்ட அமலாக்க துறைகளின் நடவடிக்கையானது தீங்கு விளைவிக்கும் வகையிலான "கக்போட்" தீநிரல் இயங்கு தளத்தினை அகற்றியது.
- இது பல்வேறு நிதிக் குற்றங்களில் இணையவெளிக் குற்றவாளிகளால் அதிகமாகப் பயன்படுத்தப் படுகிறது.
- பாதிக்கப்படுபவர்களுக்கு அனுப்பப்படும் தீங்கிழைக்கும் வகையிலான, தகவல் மறைத்து அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் மூலம் கக்போட் பரவுகிறது.
- டக் ஹன்ட் என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் பன்னாட்டு அமலாக்க முகமைகள் ஈடுபட்டன.
- கியூபோட் மற்றும் பிங்க்ஸ்லிப்பாட் என்றும் அழைக்கப்படும் கக்போட், 2007 ஆம் ஆண்டில் வங்கி சார்ந்த தகவல்களைத் திருடும் ஒரு தீநிரலாகப் பரவத் தொடங்கியது.
Post Views:
245