TNPSC Thervupettagam

கங்கா கிராமங்கள்

December 24 , 2017 2574 days 866 0
  • இந்திய அரசு ‘கங்கா கிராமம்’ என்ற திட்டத்தை புது தில்லியில் நடைபெற்ற கங்கா கிராம் சுவச்சதா சம்மேளனம் என்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது.
  • இத்திட்டமானது மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.
  • உத்தரகாண்ட், உத்திர பிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் கங்கை நதிக் கரையோரத்தில் அமைந்திருக்கும் 4470 கிராமங்களை திறந்தவெளியில் மலம் கழிக்காத [Open Defecation-Free (ODF)] கிராமங்களாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
  • இந்த கிராமங்களில் இருந்து 24 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றை ‘கங்கா கிராமங்கள்’ என்ற உயர்ந்த நிலைக்கு மாற்ற முன்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராமங்களை மத்திய அரசும், மாநில அரசுகளும் இணைந்து தேர்ந்தெடுத்துள்ளன.
  • ‘கங்கா கிராமம்’ திட்டமானது கங்கை நதிக் கரையில் அமைந்திருக்கும் கிராமங்களை பொது மக்கள் உதவியுடன் வளர்ச்சிப் பாதையில் முன்னெடுத்துச் செல்லும் ஒருங்கிணைந்த முயற்சி ஆகும்.
  • இத்திட்டத்தின் கீழ் திடக்கழிவு மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, குளங்கள் மற்றும் நீர்நிலைகள் புனரமைப்பு, நீர் மேலாண்மைத் திட்டங்கள், இயற்கை வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் மருத்துவ தாவரங்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பது ஆகியவற்றைச் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்