தேசிய தூய்மை கங்கா திட்டம் (National Mission for Clean Ganga - NMGC) ஐந்து கங்கை ஆற்றுப்படுகை மாநிலங்களான உத்தரகாண்ட், உத்திரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ‘கங்கா விரிக்சரோபன் அபியானை” தொடங்கி வைத்துள்ளது.
ஒரு வார கால காடு வளர்ப்பு இயக்கம், ‘சுப்பராம்ப் சப்தாவாக‘ ஜூலை 9, 2018லிருந்து ஜூலை 15, 2018 வரையிலான காலகட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கங்கை ஆற்றின் 5 ஆற்றுப்படுகை மாநிலங்களின் மாநில வனத்துறைகள் முகமை மையங்களாக ஏற்படுத்தப் பட்டுள்ளன.
கோட்ட கானக அலுவலர்கள் (Divisional Forest Officers - DFO) மாவட்ட நிலையிலான முகமை அலுவலர்களாகவும் மாநில அளவிலான தலைமை கானக அலுவலர்களாகவும் (Chief Conservator Forest - CCF) நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதற்காக உருவாக்கப் பட்டுள்ளனர்.