கங்கா பசுமையாக்கல் திட்டம் (Ganga Greenery scheme) என்றழைக்கப்படும் கங்கா ஹரிதீமா யோஜனா (Ganga Hariteema Yojana) என்ற திட்டத்தை கங்கை நதிப் படுகையில் அமைந்துள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தின் 27 மாவட்டங்களில் அம்மாநில அரசு தொடங்கியுள்ளது.
மண் அரிப்பை (Land erosion) கட்டுப்படுத்துவதும், கங்கை நதியினுடைய நீர்பிடிப்புப் பகுதிகளில் (Catchment areas) பசுமைப் பரப்பை (green cover) அதிகரிப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
“ஒரு நபர் ஒரு மரம்” என்ற முழக்கத்தின் (‘One Person One Tree’ slogan) கீழ் தங்களுடைய சொந்த தனியார் நிலங்களில் மரங்களை நடுவதற்கு பொது மக்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்படுவர்.
இத்திட்டத்தின் கீழ், கங்கை நதியின் இருபுற கரைகளிலிருந்தும் 1 கி.மீ பரப்பிற்கு மரம் நடுதல் மேற்கொள்ளப்படும்.
உலக ஓசோன் தினமான (world Ozone Day) செப்டம்பர் 16 அன்று இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மாநிலத்தின் வனத்துறையானது இத்திட்டத்தை செயல்படுத்தும் முதன்மைத் துறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில முதலமைச்சர் தலைமையிலான உயர் அதிகாரக் குழு (High power committee) இத்திட்டத்தின் அமலாக்கத்தை கண்காணிக்கும்.