பீகார் மாநில அரசானது பஹல்பூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரமசீலா கங்கை ஓங்கில் சரணாலயத்தில் பாலூட்டிகளுக்கான இந்தியாவின் முதலாவது ஆய்வு மையத்தை அமைக்க இருக்கின்றது.
பீகார் மாநிலமானது இந்தியாவில் இருக்கும் ஏறத்தாழ 2500-3000 கங்கை ஓங்கில்களில் பாதிக்கும் மேற்பட்ட ஓங்கில்களுக்கான வாழ்விடமாக விளங்கி வருகின்றது.
கங்கை ஆற்று ஓங்கில் முக்கியமாக கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதிகளிலும் இந்தியா, வங்க தேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் பாயும் அவற்றின் துணையாறுகளிலும் காணப்படுகின்றது.
கங்கை ஆற்று ஒங்கில் ஆனது இந்திய அரசினால் தனது தேசிய நீர் விலங்காக 2009 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.
அப்போதைய இந்தியப் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான தேசிய கங்கை நதி நீர்ப் படுகை ஆணையத்தின் முதலாவது கூட்டத் தொடரில் இந்த முடிவானது எடுக்கப் பட்டுள்ளது.
மேலும் இது இந்திய நகரான குவஹாத்தியின் அதிகாரப்பூர்வ விலங்காகவும் இருக்கின்றது.