கங்கை நதிப் படுகையில் சுமார் 3,936 கங்கை நதி ஓங்கில்கள் (763 என்ற கணிப்புத் திட்டப் பிழையுடன்) இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இக்கணக்கெடுப்பின் போது 2,510 ஓங்கில்கள் காணப் பட்ட ஒரு நிலையில் அவற்றில் 1,303 ஓங்கில்கள் உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்காளம் வரையிலான கங்கை நதிப் பகுதிகளில் காணப்பட்டன.
இது 1996 ஆம் ஆண்டு சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தின் (IUCN) செந்நிறப் பட்டியலில் அருகி வரும் இனமாகப் பட்டியலிடப்பட்டது.
தேசியக் கங்கை நதிப் படுகை ஆணையம் ஆனது, கங்கை நதி ஓங்கிலை 2010 ஆம் ஆண்டில் தேசிய நீர்வாழ் விலங்காக அறிவித்தது.