2020-ன் கங்கைத் தூய்மை திட்டத்திற்கான தன்னுடைய பங்களிப்பின் ஒரு பகுதியாக, கங்கையை தூய்மை செய்வதற்கு முன்னாள் ராணுவப் படைவீரர்களை கொண்ட பிராந்திய ராணுவப்படையை (Territorial Army) அமைக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
கங்கையின் தூய்மைக்கான முதன்மை நிறுவனமாக உள்ள கங்கை தூய்மைக்கான தேசிய நிறுவனத்திற்கென (National Mission for Clean Ganga -NMCG) ஓர் பிராந்திய ராணுவத்தின் கூட்டு சூழலியல் பணி படைப்பிரிவாக (Composite Ecological Task Force-CETF) முன்னாள் ராணுவப் படைவீரர்களை கொண்ட பணிப்படை ஒன்று அலகாபாத்தில் அமைக்கப்பட உள்ளது.
இப்படைப்பிரிவிற்கான நிதித் தேவையானது மத்திய நீர் வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் பட்ஜெட்டிலிருந்து பெறப்படும்.
மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பிராந்திய இராணுவமானது வழக்கமான ராணுவத்திற்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டாம் வரிசை பாதுகாப்பு கட்டமைப்பாகும்.
சுற்றுச்சூழல் தொடர்பான குறிப்பிட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்காக பிராந்திய இராணுவத்தின் சூழலியல் பணி படைப்பிரிவு அமைக்கப்படுகிறது.