16வது BRICS உச்சி மாநாடு ஆனது கசான் பிரகடனம் ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் நிறைவு பெற்றது.
இது கூட்டுறவு மேற்கொள்ளப் பட வேண்டிய முக்கியப் பிரிவுகள் மற்றும் உலகளாவிய பிரச்சினைகளில் இந்தக் குழுவின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டைக் குறிப்பிட்டுக் காட்டும் ஒரு விரிவான ஆவணமாகும்.
இந்தப் பிரகடனத்தின் கருத்துரு, "Strengthening Multilateralism for Just Global Development and Security - உலகளாவிய மேம்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான பலதரப்புவாதத்தை நன்கு வலுப்படுத்துதல்" என்பதாகும்.
அரசு முறை உறவுகள் மூலம் பல்வேறு அமைதியான தீர்வுகளை உருவாக்குவதற்கான அவசியத்தை இந்தப் பிரகடனம் வலியுறுத்துகிறது.
உலக நாடுகளின் முடிவெடுத்தல் செயல்முறையில் G20 அமைப்பின் மிகப்பெரும் முக்கியத்துவத்தை இந்த உச்சி மாநாடு குறிப்பிட்டுக் காட்டியது.
மிகவும் விரைந்து செயல்படக்கூடிய, துரித நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையிலான மற்றும் பிரதிநிதித்துவ அடிப்படையில் பலதரப்பு அமைப்பை உருவாக்கப் போராடச் செய்வதன் மூலம் உலகளாவிய ஆளுகையினை மேம்படுத்துவதற்கான ஒரு உறுதிப் பாட்டினை BRICS நாடுகள் மீண்டும் வலியுறுத்தின.
BRICS அமைப்பின் வங்கிகளுக்கு இடையேயான கூட்டுறவுச் செயல்முறை (ICM) ஆனது புதுமையான நிதி நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
இந்தப் பிரகடனமானது BRICS அமைப்பின் நிதிப் பரிவர்த்தனைகளில் உள்நாட்டு பண மதிப்புகளைப் பயன்படுத்துவதை ஆதரித்தது மற்றும் சுதந்திரமான பன்னாட்டு தீர்வு உள்கட்டமைப்பை ஆராய்வதை ஆதரித்தது.
BRICS தானியப் பரிவர்த்தனை அமைப்பினை நிறுவுதல் மற்றும் BRICS பன்னாட்டுக் கட்டண முறைமை மற்றும் BRICS மறு காப்பீட்டு நிறுவனத்தின் சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்தல்.
சர்வதேச பெரும்புலி இனங்கள் கூட்டணியை உருவாக்கும் இந்தியாவின் மிகப்பெரும் முன்னெடுப்பிற்கு இந்த அமைப்பில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்று ள்ளது.
மேலும் BRICS அமைப்பின் தடுப்பூசி ஆராய்ச்சி & மேம்பாட்டு மையத்தின் பல்வேறு முன்னெடுப்புகள், பெருமளவிலான தொற்று நோய் அபாயங்களைத் தடுப்பதற்காக BRICS ஒருங்கிணைந்த முன்னெச்சரிக்கை அமைப்பின் மேம்பாடு மற்றும் BRICS காச நோய் ஆராய்ச்சி வலையமைப்பின் செயல்பாடுகளை ஆதரிக்கிறது.