இந்திய மற்றும் கஜகஸ்தான் ராணுவங்களுக்கிடையேயான ‘கசிண்ட்’ (KAZIND) எனப்படும் இந்தியா-கஜகஸ்தான் கூட்டு இராணுவப் பயிற்சியானது கஜகஸ்தானின் ஒட்டார் பகுதியில் 2018 செப்டம்பரில் 10-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இது, பாதுகாப்பு அரங்கில் பரந்த ஒத்துழைப்பு வரலாற்றைக் கொண்டுள்ள, இந்த இருநாடுகளுக்கிடையேயான மூன்றாவது கூட்டு இராணுவப் பயிற்சி ஆகும்.
இப்பயிற்சியின் இரண்டாவது பதிப்பானது, கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்றது.
இப்பயிற்சியானது, கஜகஸ்தான் இராணுவம் மற்றும் இந்திய இராணுவத்திற்கிடையேயான உறவுகள் மற்றும் திறன்களை பரிமாறிக் கொள்ளுதல், இருநாட்டு இராணுவங்களுக்கிடையேயான உறவுகளை உருவாக்குவதையும் அவற்றை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.