TNPSC Thervupettagam

கச்சா எண்ணெயுடன் வந்த முதலாவது கப்பல்

April 17 , 2020 1557 days 589 0
  • ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 1 மில்லியன் பீப்பாய்களைக் கொண்ட முதலாவது கச்சா எண்ணெய்க் கப்பலானது இந்தியாவை அடைந்துள்ளது.
  • இந்தியா 5.33 மில்லியன் டன் கச்சா எண்ணெய் அளவிற்கு அவசர காலச் சேமிப்பு வசதியினைக்  கொண்டுள்ளது.
  • இது 9.5 நாட்களுக்கு நாட்டின் எண்ணெய்த் தேவைக்குப் போதுமானதாக இருக்கும்.
  • எண்ணெய்ச் சேமிப்பு இருப்புகள் மங்களூர், படூர் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் சேமித்து வைக்கப்படுகின்றன.
  • படூர் எண்ணெய்ச் சேகரிப்பு நிலையமானது மேற்குறிப்பிட்டுள்ள 3 நிலையங்களில் மிகப் பெரியதாகும்.
  • இந்தியா, தனது எண்ணெய்த் தேவையில் 83% எண்ணெயை இறக்குமதி செய்கின்றது.
  • இந்தியாவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் விநியோக நாடு ஈராக் ஆகும். இது நாட்டின் மொத்த எண்ணெய்த்  தேவையில் நான்கில் ஒரு பங்கைப் பூர்த்தி செய்கின்றது.
  • ஈராக் நாட்டைத் தொடர்ந்து சவுதி அரேபியா இந்தியாவிற்கான இரண்டாவது மிகப்பெரிய எண்ணெய் விநியோக நாடாகும்.
  • அமெரிக்கா இந்தியாவிற்கான ஆறாவது மிகப்பெரிய எண்ணெய் விநியோக நாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்