இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றின் மீதான திடீர் இலாப வரி விதிப்பினை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
ஒரு டன்னிற்கு 4,250 ரூபாயாக இருந்த, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெயின் மீதான சிறப்புக் கூடுதல் கலால் வரியானது 7,100 ரூபாயாக உயர்த்தப் பட்டுள்ளது.
இந்தியா முதன்முதலில் கடந்த ஆண்டு ஜூலை 01 ஆம் தேதியன்று முதலாவது திடீர் இலாப வரிகளை விதித்தது.
திடீர் இலாப வரி என்பது சாதகமானச் சந்தைச் சூழ்நிலைகள் அல்லது அசாதாரணச் சூழ்நிலைகள் காரணமாக வழக்கத்திற்கு மாறாக அதிக இலாபத்தை ஈட்டும் பல்வேறு நிறுவனங்களின் மீது அரசினால் விதிக்கப்படும் ஒரு சிறப்பு வரியாகும்.