பெர்சிய வளைகுடா நாடான ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கான தொகையை ரூபாயில் செலுத்துவதற்கான ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கிடையே கையெழுத்தாயின.
நவம்பர் 05 ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை மறுமுறை விதித்த போதிலும் இந்தியா மற்றும் ஏனைய 7 நாடுகளைத் தொடர்ந்து ஈரானில் கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கு அமெரிக்கா அனுமதியளித்ததைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
தேசிய ஈரான் எண்ணெய் நிறுவனத்தின் யுகோ வங்கிக் கணக்கில் இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இந்திய ரூபாய் வழங்குதலை மேற்கொள்வார்கள்.
இதற்கு முன்னர் இந்தியா தனது 3-வது பெரிய எண்ணெய் வழங்கும் நாட்டிற்கு இந்திய - ஐரோப்பிய வங்கிப் பாதையைப் பயன்படுத்தி யுரோக்களில் பணம் செலுத்தி வந்தது.