TNPSC Thervupettagam
May 29 , 2018 2373 days 822 0
  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாட்டு அமைச்சகம் இந்திய வனவுயிர் அறக்கட்டளையுடன் (Wildlife Trust of India - WTI) இணைந்து மேகாலயாவின் காரோ மலைகளில் முதன்மையான நகரமான துராவில் கஜ யாத்திரையை ஆரம்பித்துள்ளது.
  • இந்நிகழ்ச்சி மாநில வனத் துறையுடன் இணைந்து இந்திய வனவுயிர் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டது.
  • இந்தியாவின் புராதன விலங்கை கொண்டாடும் விதமான பயணமான கஜ யாத்திரை இந்தியா முழுவதும் 100 யானை வழித்தடங்களை பாதுகாக்க எண்ணுகிறது.
  • மேகாலயா மாநிலத்தின் தேசியப் பூங்காக்களான பால்பக்ராம் மற்றும் நோக்ரேக் ஆகியவற்றுக்கு இடையே சில 1000க்கும் மேற்பட்ட யானைகள் கடந்திட உபயோகித்திடும் சிஜீ-ரேவக் வழித்தடம் உட்பட நான்கு வழித்தடங்கள் மேகாலயா மாநிலத்தில் உள்ளன.
  • இத்திட்டம் யானை உயிர்வாழிடங்களை கொண்ட 12 மாநிலங்களில் யானைகளை பாதுகாக்க எண்ணும் 18 மாத தேசிய அளவிலான பிரச்சாரத் திட்டமாகும்.

  • இத்திட்டம் ஆகஸ்டு மாதம் 2017ம் ஆண்டு சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனால் 2017ம் ஆண்டுக்கான உலக யானைகள் தினத்தை முன்னிட்டு ஆகஸ்டு 12ம் தேதி ஆரம்பிக்கப்பட்டது.
  • இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எங்கெல்லாம் யானைகள் கூட்டமாக உலா வருகின்றனவோ அம்மாவட்டங்கள் முழுவதும் யானை சின்னங்களை பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
  • இத்திட்டம் மனித-யானை மோதலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீள்குடியேற்றம் செய்யத் திட்டமிடும் அதே வேளையில் முக்கிய உறைவிடங்களுக்கிடையேயான யானைகளின் தடையற்ற இடப்பெயர்ச்சிற்கும் உறுதுணை புரிகிறது.
   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்