50வது கஜுராஹோ நடனத் திருவிழாவானது, மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோவில் தொடங்கியது.
இந்தத் திருவிழாவானது 1975 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
இது ஒவ்வோர் ஆண்டும், போபால் நகரில் உள்ள உஸ்தாத் அலாவுதீனின் இசை மற்றும் கலைக் கழகத்தின் உதவியுடன் கலாச்சாரத் துறையினால் கஜுராஹோவில் ஏற்பாடு செய்யப்படுகிறது.
கதக் கும்பமேளா திருவிழாவின் போது, கஜுராஹோ நகரம் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது.
1484 பங்கேற்பாளர்கள், கஜுராஹோவின் பழமையான கோயில்களுக்கு மத்தியில் அமைந்த இடத்தில் ஒரே நேரத்தில் கூடி தங்கள் நடனத் திறமைகளை வெளிப்படுத்தி, நடன நிகழ்ச்சியை நிகழ்த்தினர்.
இது ஏற்கனவே 1204 பங்கேற்பாளர்களால் நிகழ்த்தப்பட்ட ஒரு முந்தைய சாதனையை முறியடித்தது.