TNPSC Thervupettagam

கஜோங் மற்றும் சக்மா

May 5 , 2020 1576 days 752 0
  • மத்திய அரசின் வட கிழக்குப் பகுதி மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது கோவிட் – 19 தொற்று மேலாண்மையில் கஜோங் மற்றும் சக்மா சமுதாயங்களையும் இணைக்குமாறு அருணாச்சலப் பிரதேச மாநில அரசை அறிவுறுத்தியுள்ளது.
  • சக்மா மற்றும் கஜோங் சமுதாயங்கள் என்பது அப்போதைய கிழக்குப் பாகிஸ்தானின் (வங்க தேசம்) சிட்டகாங் மலையில் இருந்து இடம்பெயர்ந்த மக்களைக் குறிக்கின்றது.
  • இவர்கள் தற்பொழுது வரை அருணாச்சாலப் பிரதேசத்தில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.
  • சக்மா இனத்தைச் சேர்ந்தவர்கள் புத்த மதத்தைச் சார்ந்தவர்களாகவும் கஜோங் இனத்தைச் சேர்ந்தவர்கள் இந்துக்களாகவும் உள்ளனர்.
  • தற்பொழுது, இந்தப் பழங்குடியினர் இந்தியாவில் குடியுரிமை அல்லது நில உரிமைகளைக் கொண்டிருக்கவில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்