TNPSC Thervupettagam

கஞ்சா சாகுபடி சோதனைத் திட்டம்

February 2 , 2025 21 days 106 0
  • மருத்துவம் மற்றும் தொழில்துறை நோக்கங்களுக்காக வேண்டி கஞ்சாப் பயிர்களை கட்டுப்படுத்தப் பட்ட முறையில் பயிரிடுவது குறித்து இரண்டு பல்கலைக்கழகங்கள் நடத்திய ஒரு சோதனை ஆய்விற்கு இமாச்சலப் பிரதேச மாநில அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.
  • மத்தியப் பிரதேசம், ஜம்மு & காஷ்மீரில் ஏற்கனவே, அத்தகைய சாகுபடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • இந்தச் சோதனைத் திட்டம் வெற்றியடைந்தால், கட்டுப்படுத்தப்பட்ட கஞ்சாப் பயிர்ச் சாகுபடியை அனுமதிக்கும் நான்காவது மாநிலமாக இமாச்சலப் பிரதேசம் மாறும்.
  • அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளும் இத்தகைய சாகுபடியினை அனுமதிக்கின்றன.
  • இது குறைந்தபட்ச அளவில் போதையூட்டும் பண்புகளைக் கொண்ட குறிப்பிட்ட கஞ்சா வகைகளின் கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் அதனைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான கடுமையான கண்காணிப்புடன் கூடிய சாகுபடி முறையாகும்.
  • இந்தியாவில் கஞ்சாப் பயிர் சாகுபடியானது பெரும்பாலும் அதன் மிகவும் மோசமான மனோவியல் பண்புகள் காரணமாக தடைசெய்யப்பட்டுள்ளது.
  • 1985 ஆம் ஆண்டு பல்வேறு போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் (NDPS) சட்டத்தின் 2வது பிரிவானது, கஞ்சா பிசின் மற்றும் பூக்களின் உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடை செய்கிறது.
  • 2018 ஆம் ஆண்டில் கட்டுப்படுத்தப்பட்ட கஞ்சாப் பயிர் சாகுபடியை அனுமதித்த முதல் மாநிலம் உத்தரகாண்ட் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்