TNPSC Thervupettagam

கடக்நாத் கோழிகள் – மத்தியப் பிரதேசம் – புவிசார் குறியீடு

April 15 , 2018 2287 days 847 0
  • சென்னையில் அமைந்துள்ள புவிசார் குறியீடு பதிவு மற்றும் அறிவுசார் சொத்துரிமை இந்தியா (Geographical Indication Registry and Intellectual Property India) அலுவலகமானது மத்தியப் பிரதேச மாநிலத்தின் கடக்நாத் கோழிகளுக்கு (Kadaknath chicken) புவிசார் குறியீட்டை (Geographical Indication) வழங்கியுள்ளது.
  • தங்களுடைய கருமைநிற இறகுகள் காரணமாக முழு கருமைநிறம் தோற்றம் கொண்டமையால் கடக்நாத் கோழி இனமானது தனித்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
  • மெலனின் நிறமிகளின் (Melanin pigment) படிவுகள் காரணமாக கடக்நாத் கோழிகள் கருப்பு நிறத்தில் காணப்படுகின்றன.
  • மத்தியப் பிரதேச மாநிலத்தின் அலிராஜ்பூர், ஜபூவா போன்ற பழங்குடியின மாவட்டங்கள் கடக்நாத் கோழிகளின் பூர்வீக (Native) இடங்களாகும்.
  • கடக்நாத் கோழிகளானது அவற்றினுடைய தகவமைப்புத்தன்மை (adoptability) மற்றும் கருமைநிற, நற்சுவையுடைய இறைச்சி காரணமாக மிகவும் பிரபலமானவையாக காணப்படுகின்றன. மேலும் இதன் இறைச்சியானது மருத்துவ குணங்கள் உடையவை என நம்பப்படுகின்றது.
  • அண்மையில், கடக்நாத் கோழிகளின் விற்பனைக்காக மத்தியப் பிரதேச அரசானது “MP கடக்நாத்” (MP Kadaknath’) எனும் கைபேசி செயலியை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
  • கடக்நாத் கோழிகளின் மேல் புவிசார் குறியீடைப் பெற இரு மாநிலங்களும் அவற்றினுடைய பூர்வீக இடத்தின் மீது உரிமை கோரியதால் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களிடையே அண்மையில் சச்சரவு உண்டானது குறிப்பிடத்தக்கது

புவிசார் குறியீடு (Geographical Indication )

  • புவியின் ஒரு குறிப்பிட்ட இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிப்பிடும் பொருட்களுக்கு அங்கீகாரம் தரும்வகையில் அவற்றின் மீது பயன்படுத்தப்படும் ஓர் பெயர் அல்லது சின்னமே புவிசார் குறியீடு எனப்படும்.
  • சிறப்புத் தரங்களும், சொந்த இடத்தின் நன்மதிப்பையும் உடைய வேளாண் பொருட்கள், இயற்கை மற்றும் தயாரிப்புப் பொருட்களுக்கு இக்குறியீடு இந்திய காப்புரிமை அலுவலகத்தால் வழங்கப்படுகிறது.
  • புவிசார் குறியீட்டு அடையாளம் 10 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது. அதற்கு பிறகு பதிவுப் புதுப்பிப்பு தேவை.
  • தொழிற்துறை சொத்துக்கள் பாதுகாப்பிற்கான பாரிஸ் ஒப்பந்தத்தின் (Paris Convention For Protection Of Industrial Property) கீழ் அறிவுசார் சொத்துரிமையின் ஒரு பகுதியாக GI உட்சேர்க்கப்பட்டுள்ளது.
  • சர்வதேச அளவில், உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO-World Trade Organisation) அறிவுசார் சொத்துரிமைகளின் வணிகம் தொடர்பான அம்சங்கள் குறித்த ஒப்பந்தத்தால் (TRIPS-Agreement On Trade-Related Aspects Of Intellectual Property Rights) GI நிர்வகிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் GI 1999-ஆண்டின் பலவகை பொருட்களுக்கான புவிசார் குறியீடுகள் மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் (Geographical Indications of Goods (Registration and Protection Act,1999-GI Act) கீழ் இந்திய காப்புரிமை அலுவலகத்தால் வழங்கப்படுகிறது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்