ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு) மசோதா, 2018 க்கு மக்களவை அனுமதி அளித்துள்ளது.
இம்மசோதா கடத்தலைத் தடுத்தல், மீட்டெடுத்தல் மற்றும் கடத்தப்பட்ட நபர்களுக்கான புனர்வாழ்வு அளித்தல் மற்றும் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தேசிய கடத்தலுக்கெதிரான கழகத்தினை அமைத்தல் ஆகியவற்றுக்கு வழி வகுக்கிறது.
இம்மசோதா வழக்கு விசாரணைகளை ஒரு வருடத்திற்குள் முடிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதிமன்றங்களை அமைக்க வழிவகுக்கும்.
மாநில கடத்தலுக்கெதிரான குழுவின் வழிமுறைகள் படி இம்மசோதாவின் கீழ் செயல்களை ஆற்றுவதற்கான பொறுப்புகள், நிவாரண மற்றும் புனர்வாழ்வு சேவைகளை வழங்குவதற்கான பொறுப்புகள் ஆகியவற்றைக் கொண்ட மாநில கிளை முகவரை நியமனம் செய்வதையும் இம்மசோதா மாநிலங்களுக்கு கட்டாயமாக்கியுள்ளது.
மேலும் இம்மசோதா, கடத்தலுக்கெதிரான நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு குழுக்களை (Anti-Trafficking Relief & Habilitation Committee) தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் நிறுவுவதற்கும் வழிவகுக்கிறது.
இந்த மசோதா, மிகவும் மோசமான கடத்தலுக்கு 10 வருடங்கள் முதல் வாழ்நாள் சிறை (ஆயுள் தண்டனை) வரையிலான கடுமையான தண்டனையினை வழங்குகிறது.