TNPSC Thervupettagam

கடத்தலுக்கு எதிரான மசோதா

July 30 , 2018 2314 days 678 0
  • ஆள் கடத்தல் (தடுப்பு, பாதுகாப்பு மற்றும் புனர்வாழ்வு) மசோதா, 2018 க்கு மக்களவை அனுமதி அளித்துள்ளது.
  • இம்மசோதா கடத்தலைத் தடுத்தல், மீட்டெடுத்தல் மற்றும் கடத்தப்பட்ட நபர்களுக்கான புனர்வாழ்வு அளித்தல் மற்றும் கடத்தல் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தேசிய கடத்தலுக்கெதிரான கழகத்தினை அமைத்தல் ஆகியவற்றுக்கு  வழி வகுக்கிறது.
  • இம்மசோதா வழக்கு விசாரணைகளை ஒரு வருடத்திற்குள் முடிப்பதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் நீதிமன்றங்களை அமைக்க வழிவகுக்கும்.
  • மாநில கடத்தலுக்கெதிரான குழுவின் வழிமுறைகள் படி இம்மசோதாவின் கீழ் செயல்களை ஆற்றுவதற்கான பொறுப்புகள், நிவாரண மற்றும் புனர்வாழ்வு சேவைகளை வழங்குவதற்கான பொறுப்புகள் ஆகியவற்றைக் கொண்ட மாநில கிளை முகவரை நியமனம் செய்வதையும் இம்மசோதா மாநிலங்களுக்கு கட்டாயமாக்கியுள்ளது.
  • மேலும் இம்மசோதா, கடத்தலுக்கெதிரான நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு குழுக்களை (Anti-Trafficking Relief & Habilitation Committee) தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் நிறுவுவதற்கும் வழிவகுக்கிறது.
  • இந்த மசோதா, மிகவும் மோசமான கடத்தலுக்கு 10 வருடங்கள் முதல் வாழ்நாள் சிறை (ஆயுள் தண்டனை) வரையிலான கடுமையான தண்டனையினை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்