2023 ஆம் ஆண்டின் கோடை காலமானது, கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக வடக்கு அரைக்கோளத்தில் பதிவான மற்ற கோடைக் காலங்களை விட மிக வெப்பமானதாக இருந்தது.
உலகளாவிய நவீன வெப்பநிலைப் பதிவுகள் தொடங்கிய 1850 ஆம் ஆண்டிற்குப் பிறகு, 2023 ஆம் ஆண்டுதான் மிகவும் வெப்பமான ஆண்டாகப் பதிவாகும் என்று அறிவியல் நிபுணர்கள் முன்பே தீர்மானித்தனர்.
கடந்த ஆண்டின் கோடை காலத்தின் அதீத வெப்பம் ஆனது நவீன காலப் பதிவுகளை விஞ்சியதோடு மட்டுமின்றி, கிபி 246 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கருவிசார் பதிவுகளுக்கு முன்னதாக இருந்த வெப்பமான கோடைக் காலத்தை - அரை டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலையில் விஞ்சியது.
இது (கிபி 536 ஆம் ஆண்டில்) பொதுவான கோடையை விட கிட்டத்தட்ட 4 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருந்தது
ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் பருவநிலை மாற்றச் சேவை நிறுவனம் ஆனது, 2023 ஆம் ஆண்டு சுமார் 100,000 ஆண்டுகளில் மிகவும் வெப்பமானதாக இருப்பதற்கு "மிக அதிக சாத்தியம் உள்ளதாக" கூறியது.
1990 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் ஒவ்வோர் ஆண்டும் வெப்ப அலைகள் காரணமாக 43 நாடுகளில் 150,000 க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன.