TNPSC Thervupettagam

கடன் அட்டைகள் மூலம் UPI பணம் செலுத்த அனுமதித்த முதல் அரசு வங்கி

July 3 , 2023 510 days 312 0
  • RuPay கடன் அட்டை மூலம் வணிகர்களுக்கு UPI (Unified Payments Interface) கட்டணங்களை வழங்கும் இந்தியாவின் முதலாவது பொதுத் துறை வங்கியாக கனரா வங்கி மாறியுள்ளது.
  • இந்தப் புதிய அம்சமானது வங்கியின் பிரபலமான "கனரா ஏஐ1" (Canara ai1) என்ற ஒரு செயலியில் கிடைக்கிறது.
  • இந்த வசதியை அறிமுகப்படுத்த NPCI (National Payments Corporation of India) அமைப்புடன் அந்த வங்கியானது கூட்டு சேர்ந்துள்ளது.
  • இது கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் RuPay கடன் அட்டையினைப் பயன்படுத்தி அதன் மூலம் வணிகர்களுக்கு விரைவான மற்றும் தடையின்றிப் பணம் செலுத்த உதவுவதோடு அது அவர்களுக்கு அதிக நெகிழ்வுத் தன்மையையும் பெரும் வசதியையும் வழங்குகிறது.
  • இந்தக் கூட்டு முயற்சியானது கனரா வங்கி வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பு, பத்திரம் மற்றும் வசதியானக் கட்டணப் பரிவர்த்தனைகளை வழங்கச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • RuPay கடன் அட்டைகள் மூலம் UPI வசதியினை அறிமுகம் செய்வதன் வாயிலாக வங்கி வாடிக்கையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் இது பல புதிய வாய்ப்புகளை அளித்து, கடன் சுற்றுச்சூழலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்