TNPSC Thervupettagam

கடன் சந்தைகளுக்கான நிரந்தர குறியீடுகள்

December 23 , 2017 2382 days 791 0
  • இந்தியாவின் முதலீட்டு தகவல் மற்றும் தர மதிப்பீடு நிறுவனத்தின் கிளையான ICRA (formerly Investment Information and Credit Rating Agency of India Limited) மேலாண்மை ஆலோசனை சேவை அமைப்பு இந்திய கடன் சந்தையில் நீண்ட விரிவாக்கத்தை ஏற்படுத்த பெரு நிறுவனப் பத்திரங்கள் உள்பட நான்கு நிரந்தர வருமான குறியீடுகளை ஏற்படுத்தியுள்ளது.
  • இந்த குறியீடுகளாவன – ICRA கில்ட் எனப்படும் அரசுப் பத்திரங்களுக்கான குறியீடுகள், ICRA எளிதில் மாற்றிக் கொள்ளக் கூடிய குறியீடுகள், ICRA பெரு நிறுவனப் பத்திரக் குறியீடுகள் மற்றும் கலப்பு கடன் குறியீடுகள்.
  • இது சொத்து மேலாளர்களையும் முதலீட்டாளர்களையும் நிரந்தர வருமானச் சந்தைகளின் ஆபத்துகள், இலாபங்கள் மற்றும் மாற்றங்களை பயனுள்ள வரையறைகளுடன் அளப்பதற்கு உதவியாக இருக்கும்.
  • இந்தக் குறியீடுகளின் உள்ளடக்கப் பொருட்கள் மிகுந்த பன்முகத் தன்மை கொண்டதாகவும், பலதரப்பட்ட துறைகளையும், பங்களிப்பாளர்களையும் கொண்டதாகவும் உள்ளன.
  • இதில் சமநிலைப்படுத்துதல் என்பது சில்லறை குறியீடுகளுக்கு ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும், மற்றவைகளுக்கு மாதத்திற்கு ஒரு முறையும் ஏற்படும்.
  • ICRA என்பது ஒரு இந்திய, தனிப்பட்ட மற்றும் திறம்பட்ட தொழில்முறை சார்ந்த முதலீட்டு தகவல் மற்றும் தர மதிப்பீட்டு நிறுவனம் ஆகும். இது 1991ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
  • இதன் சுதந்திர இயக்குநர் மற்றும் நிர்வாகம் சாராத தலைவர் அருண் துக்கால் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்