TNPSC Thervupettagam

கடன் மீட்பு விண்ணப்பம் – நிதி வரம்பு

September 9 , 2018 2141 days 762 0
  • வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களால் கடன் மீட்பு தீர்ப்பாயங்களில் (DBT – Debt Recovery Tribunals) தாக்கல் செய்யப்படும் கடன் மீட்பு விண்ணப்பத்திற்கான நிதியை இருமடங்காக 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த வகையான வழக்குகள் நிலுவையில் இருப்பதை குறைப்பதற்கு உதவுவதற்காக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • இதன்படி, வங்கி அல்லது நிதிநிறுவனங்கள் அல்லது வங்கி அல்லது நிதி நிறுவனங்களின் கூட்டமைப்புகள் கடன் தொகை 20 லட்சத்திற்கு குறைவாக இருந்தால் அவை கடன் மீட்பு தீர்ப்பாயங்களை அணுக முடியாது.

கடன் மீட்பு தீர்ப்பாயங்கள் (DRT)

  • வங்கிகள் மற்றும் இதர நிதி நிறுவனங்கள் அவர்களின் வாடிக்கையாளர்களுக்காக கடன் மீட்பை உறுதிப்படுத்துவதற்காக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சட்டம் 1993-ன் கீழ் முதன்முறையாக அமைக்கப்பட்டது.
  • கடன் மீட்புத் தீர்ப்பாயம் தனக்கு விண்ணப்பித்த 180 நாட்களுக்குள் வழக்குகளை முடித்து வைக்க வேண்டும். இவ்வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் கடன் மீட்பு மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் (DRATs – Dept Recovery Appellate Tribunals) மேல்முறையீடு செய்யலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்