கடன் வழங்குபவரின் பொறுப்பு குறித்த நெறிமுறை – குழு
December 3 , 2019 1822 days 655 0
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநரான எச்.ஆர் கான் என்பவர் கடன் வழங்குபவரின் (நுண் கடனில்) பொறுப்பு குறித்த நெறிமுறையின் (Code for Responsible Lending - CRL) வழிகாட்டுக் குழுவின் முதலாவது தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
CRL என்பது நுண் கடன் வழங்குதல் துறையில் உள்ள வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் - நுண் நிதியியல் நிறுவனம் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனம் போன்ற பல்வேறு அமைப்புகளுக்கான ஒரு சுய ஒழுங்குமுறை நடவடிக்கையாகும். இது வாடிக்கையாளர் பாதுகாப்பின் தரத்தினைப் பின்பற்றுகின்றது.