இந்தியக் கடற்படை இலங்கை கடற்படையுடன் இணைந்து கூட்டுப் பெருங்கடலியல் கணக்காய்வின் (joint oceanographic survey) இரண்டாவது கட்டத்தை இலங்கையின் தென்மேற்கு கடற்பகுதியில் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
சமீபத்திய நீரியல் அமைவு வரைபட (Hhydrographic data) தரவுகளைக் கொண்டு இலங்கையின் தென் கடற்பகுதிகளில் கடற் வழிப்பயண வரைபடங்களை (Nnavigational charts) மேம்படுத்துவதே இக்கூட்டுப் பெருங்கடலியல் கணக்காய்வின் நோக்கமாகும்.
கூட்டு பெருங்கடலியல் கணக்காய்வு
2017ஆம் ஆண்டின் மார்ச் 30 முதல் மே 11 வரை பெருங்கடலியல் கணக்காய்வின் முதற்கட்டம் இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே மேற்கொள்ளப்பட்டது.
உள்நாட்டுத் தொழிற்நுட்பத்தோடு வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்ட ஐ.என்.எஸ் தர்ஷாக் கடற்படை கப்பல் மூலம் பெருங்கடலியல் கணக்காய்வின் முதற் கட்டம் மேற்கொள்ளப்பட்டது.
பெருங்கடலியல் கணக்காய்வின் மூன்றாம் கட்டம் 2018–ல் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.