இந்தியக் கடற்படையானது கடற்படையின் மறைந்திருந்து தாக்கி அழிக்கும் ஐஎன்எஸ் கொச்சி என்ற கப்பலிலிருந்து பிரம்மோஸ் என்ற மீயொலி வகை ஏவுகணையை சோதனை செய்தது.
இந்த ஏவுகணையானது அரேபியக் கடலில் பணியிலிருந்து நீக்கப்பட்ட கப்பலை இலக்காகக் கொண்டு, அதனை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.
இதற்கு முன்பு பிரம்மோஸ் ஏவுகணையானது ஐஎன்எஸ் கொல்கத்தா என்ற கப்பலிலிருந்து இரண்டு முறை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது (ஜூன் 2014 மற்றும் பிப்ரவரி 2015). 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐஎன்எஸ் கொச்சி என்ற கப்பலிலிருந்து இதன் ஒரு வெற்றிகரமான சோதனையும் நடத்தப்பட்டுள்ளது.
பிரம்மோஸ் ஆனது கப்பலிலிருந்து செலுத்தப்படும் உலகின் ஒரு அதிவேக ஏவுகணை ஆகும். இதன் தாக்குதல் வரம்பு 290 கி.மீ ஆகும்.