சமீபத்தில், நிதி ஆயோக் அமைப்பானது இந்தியாவில் கடற்பாசி சாகுபடியை நன்கு ஊக்குவிப்பதற்காக ஒரு விரிவான செயல்திட்டத்தினை வகுத்துள்ளது.
இது "கடற்பாசி மதிப்புச் சங்கிலி மேம்பாட்டிற்கான உத்தி" என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வேர், தண்டு மற்றும் இலைகள் இல்லாத பிரதானமான, கடல் சார் பூக்காத கடற் பாசிகள் ஆனது கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பெரிய அளவிலான இந்தக் கடற்பாசிகள் ஆழமான கடல்பகுதியில் கெல்ப் காடுகள் எனப்படும் காடுகளை உருவாக்குகின்றன.
இந்தியாவானது, முதன்மையாக தமிழ்நாட்டில், இயற்கையான படுகைகளில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 33,345 டன் (ஈரமான எடை) கடற்பாசிகளை சாகுபடி செய்கிறது.
இந்தியாவின் வருடாந்திரக் கடற்பாசி வருவாய் சுமார் 200 கோடி ரூபாயுடன் உலக உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவானப் பங்கினையே அளிக்கிறது.
2018-19 ஆம் ஆண்டில் 7.28% ஆக இருந்த வேளாண்மையில் சார்பு நிலைத் துறையின் மொத்த மதிப்பின் பங்கை 2024-25 ஆம் ஆண்டில் 9% ஆக உயர்த்துவதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில், உலகளாவிய கடற்பாசி சந்தை மதிப்பு 9.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.
சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியக் குடியரசு மற்றும் மலேசியா ஆகியவை முக்கிய கடற்பாசி வர்த்தக நாடுகளில் அடங்கும்.