TNPSC Thervupettagam

கடலடிக் கம்பிவடங்களின் தாங்குந் திறன் தொடர்பான சர்வதேச ஆலோசனைக் குழு

December 12 , 2024 10 days 47 0
  • சர்வதேச கம்பிவடங்கள் பாதுகாப்புக் குழு (ICPC) ஆனது, கடலடிக் கம்பிவடங்களின் தாங்குந் திறன் தொடர்பான சர்வதேச ஆலோசனைக் குழுவை உருவாக்கியுள்ளது.
  • பழமையான உள்கட்டமைப்பு, அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சார்ந்த அச்சுறுத்தல்கள் மற்றும் உலகளாவிய கம்பி வட நிறுவல் அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்படும் பல்வேறு  சவால்களை எதிர்கொள்வதனை இந்த அமைப்பு நோக்கமாக உள்ளதுகொண்டுள்ளது.
  • 40 உறுப்பினர்களைக் கொண்ட இந்த ஆலோசனைக் குழுவில் அமைச்சர்கள், ஒழுங்கு முறைத் தலைவர்கள் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு தொலைத்தொடர்பு நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர்.
  • மும்பை, சென்னை, கொச்சி, தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள 14 தரையிணைப்புக் கட்டுப்பாட்டு நிலையங்களில் சுமார் 17 சர்வதேச கடலடிக் கம்பி வடங்களை இந்தியா கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்