TNPSC Thervupettagam

கடலடிச் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வுக்கான ASIA

February 19 , 2025 4 days 29 0
  • இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இனைந்து தன்னாட்சி அமைப்புகள் தொழில்துறைக் கூட்டணி (ASIA) என்ற புதிய முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளன.
  • இது இந்திய-பசிபிக் பகுதியில் தொழில்துறை கூட்டாண்மைகள் மற்றும் உற்பத்தியை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • வணிக அடிப்படையில் UDA தொழில்நுட்பங்களுக்கு அமெரிக்கா சில கூட்டு உற்பத்தி மற்றும் கூட்டு மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்கியுள்ளது.
  • இந்த மிகவும் முக்கியத் தகவல்களைப் பாதுகாக்கும் தொழில்நுட்பங்களில் அமெரிக்க பாதுகாப்புத் துறையுடன் இணைந்துப் பணியாற்ற முன்வந்த முதல் நாடு இந்தியா ஆகும்.
  • கடலடிச் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு (UDA) என்பது பெருங்கடல்கள் மற்றும் கடல்கள் போன்ற நீர்நிலைகளின் மேற்பரப்பிற்கு அடியில் நிகழும் செயல்பாடுகளைக் கண்காணிக்க, கண்டறிய மற்றும் மதிப்பிடுவதற்கான ஒரு நாடு அல்லது அமைப்பின் திறனைக் குறிக்கிறது.
  • இது கடல்சார் பாதுகாப்பு, வள மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பேரிடர் எதிர் நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்