TNPSC Thervupettagam

கடலில் குப்பைகள் சேருவதைத் தடுத்தல்

April 22 , 2021 1187 days 574 0
  • இதற்கான ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசிற்கும் ஜெர்மனியக் கூட்டாட்சிக் குடியரசிற்குமிடையே கையெழுத்தானது.
  • இது 2022 ஆம் ஆண்டிற்குள், ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களை ஒழிப்பதற்கான இந்தியாவின் இலக்கினை அடைய இந்திய நாட்டிற்கு உதவும்.
  • சமீபத்தில் இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகியவை “கடல் சூழலில் நுழையும் நெகிழிப் பொருட்களை தடுக்கும் நகரங்கள்என்ற கருத்து மீதான ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டன.
  • கடலில் சேரும் குப்பைகள் உலகம் முழுவதும் உள்ள மீன்பிடித் தொழில் மற்றும் சுற்றுலாத் துறையை வெகுவாக பாதிக்கவும் சுற்றுச்சூழலுக்கு ஒரு அபாயமாகவும் உள்ளன.
  • நுண்ணிய நெகிழிப் பொருட்கள் பற்றி அதிகரித்து வரும் பயத்தாலும் அவை உணவுச் சங்கிலியில் உள்நுழையும் அபாயம் உள்ளதாலும் இது பொதுச் சுகாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது.
  • இத்திட்டம் முக்கியமாக கேரளா, உத்தரப் பிரதேசம், மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்பட உள்ளது.
  • இத்திட்டம் குறிப்பாக போர்ட் பிளேர், கொச்சி மற்றும் கான்பூர் போன்ற நகரங்களுக்கு இதற்கான ஆதரவினை வழங்கும்.
  • உலகளவில் கடலில் சேரும் குப்பைகளுக்கு  இந்தியா பன்னிரண்டாவது பெரிய மூல ஆதாரமாக உள்ளது.
  • 2025 ஆம் ஆண்டிற்குள் கடலில் சேரும் குப்பைகளுக்கு 5வது பெரிய மூல ஆதாரமாக இந்தியா மாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
  • பெருங்கடலில் கலக்கும் 90% நெகிழிப் பொருட்களில் 15% முதல் 20% வரையிலான நெகிழிப் பொருட்கள் உலகின் அதிக மாசுபடுத்தும் 10 நதிகளின் மூலமாகவே கலக்கப் படுகிறது என கணக்கிடப்பட்டுள்ளது.
  • அவற்றுள் இரு நதிகளான கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் இந்தியாவில் அமைந்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்