இதற்கான ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசிற்கும் ஜெர்மனியக் கூட்டாட்சிக் குடியரசிற்குமிடையே கையெழுத்தானது.
இது 2022 ஆம் ஆண்டிற்குள், ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருட்களை ஒழிப்பதற்கான இந்தியாவின் இலக்கினை அடைய இந்திய நாட்டிற்கு உதவும்.
சமீபத்தில் இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகியவை “கடல் சூழலில் நுழையும் நெகிழிப் பொருட்களை தடுக்கும் நகரங்கள்” என்ற கருத்து மீதான ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டன.
கடலில் சேரும் குப்பைகள் உலகம் முழுவதும் உள்ள மீன்பிடித் தொழில் மற்றும் சுற்றுலாத் துறையை வெகுவாக பாதிக்கவும் சுற்றுச்சூழலுக்கு ஒரு அபாயமாகவும் உள்ளன.
நுண்ணிய நெகிழிப் பொருட்கள் பற்றி அதிகரித்து வரும் பயத்தாலும் அவை உணவுச் சங்கிலியில் உள்நுழையும் அபாயம் உள்ளதாலும் இது பொதுச் சுகாதாரத்தைப் பெரிதும் பாதிக்கிறது.
இத்திட்டம் முக்கியமாக கேரளா, உத்தரப் பிரதேசம், மற்றும் அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள் ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டம் குறிப்பாக போர்ட் பிளேயர், கொச்சி மற்றும் கான்பூர் போன்ற நகரங்களுக்கு இதற்கான ஆதரவினை வழங்கும்.
உலகளவில் கடலில் சேரும் குப்பைகளுக்கு இந்தியா பன்னிரண்டாவது பெரிய மூல ஆதாரமாக உள்ளது.
2025 ஆம் ஆண்டிற்குள் கடலில் சேரும் குப்பைகளுக்கு 5வது பெரிய மூல ஆதாரமாக இந்தியா மாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
பெருங்கடலில் கலக்கும் 90% நெகிழிப் பொருட்களில் 15% முதல் 20% வரையிலான நெகிழிப் பொருட்கள் உலகின் அதிக மாசுபடுத்தும் 10 நதிகளின் மூலமாகவே கலக்கப் படுகிறது என கணக்கிடப்பட்டுள்ளது.
அவற்றுள் இரு நதிகளான கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆகிய நதிகள் இந்தியாவில் அமைந்து உள்ளன.