கடந்த ஆண்டு கடலில் உள்ள நெகிழிப் பொருட்கள் பிரகடனம் குறித்து உறுதிமொழி எடுத்த பின்பு, 2021 ஆம் ஆண்டில் நாட்டில் ஒற்றைப் பயன்பாடு கொண்ட நெகிழிப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் டிரூடோ அறிவித்துள்ளார்.
“கடலில் உள்ள நெகிழிப் பொருட்கள் பிரகடனம்” என்பது உலகில் உள்ள பெருங்கடல்களில் காணப்படும் மாசுபாடுகளுக்கு எதிராக எந்த ஒரு கட்டுப்பாட்டையும் விதிக்காத பிரகடனமாகும்.
கடந்த ஆண்டு கியூபெக்கில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டின் போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் இத்தாலி ஆகியவை இந்தப் பிரகடனம் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டன.
இந்தப் பிரகடனத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணையவில்லை.