2000 ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில், கேரளாவில் தென்மேற்குக் கடற்கரையில் உள்ள கடலுண்டியில் சுமார் 8 ஹெக்டேர் பரப்பளவில் பெரும் வளம் நிறைந்த கடல் அலையால் உருவான சேற்று நிலங்கள் இருந்தது.
தற்போது, கடலுண்டிப்புழா ஆற்றின் முகத்துவாரத்தில் காணப்பட்ட சேற்று நிலங்களின் பரப்பு வெறும் 1 ஹெக்டேராகக் குறைந்துள்ளது.
இதுவும் படிப்படியாக மணலால் மூடப்பட்டு வருகிற நிலையில், இதனால் குளிர் காலத்தில் நிலவும் குளிர்ந்தப் பருவநிலையிலிருந்துத் தப்பிக்க கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கடலுண்டி கிராமத்திற்கு இடம்பெயரும் ஆயிரக்கணக்கான கரையோரப் பறவைகளுக்கு இரை கிடைக்காமல் போகிறது.
கடலுண்டி பகுதியானது, வலசைப் போகும் கடற்கரைப் பறவைகளின் முக்கிய இடமாக உலக வரைபடத்தில் குறிப்பிடப்படுகிறது.