டெல்லியில் அமைந்துள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE) எனப்படும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பானது, இந்தியா முழுவதிலும் கடல்பகுதியில் காணப் படும் குப்பை மாசுபாட்டினைக் குறைப்பதற்காக வேண்டி கடலோர நகரங்களின் ஒரு கூட்டணியைத் தொடங்கியுள்ளது.
இந்தியா 7,000 கிலோமீட்டருக்கும் அதிகமான அளவு கடற்கரைப் பரப்பினைக் கொண்டு உள்ளதால், இந்த ஆபத்தைக் கட்டுப்படுத்துவதில் ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது.
சுமார் 80 சதவீத கடல் குப்பைகள், திடக்கழிவுகள் நிலம் சார்ந்த கழிவகற்ற முறைகளில் தவறான முறையில் கையாளப்படுவதால், நிலத்திலிருந்துக் கடலினுள் பாயும் பல்வேறு கூறுகள் மூலமாக கடல் பரப்பினை அடைகின்றன.
மீதமுள்ள 20 சதவீதக் குப்பைகள் கடலோரக் குடியேற்றங்களால் உருவாக்கப் படச் செய்கின்றன.
கடல்சார் சுற்றுச்சூழலில் சேரும் கழிவுகளில் 90 சதவீதம் நெகிழிக் குப்பைகள் ஆகும்.