இந்த மசோதாவானது, மிகவும் சிக்கனமான, நம்பகமான மற்றும் மிக நிலையான போக்குவரத்து முறையை ஊக்குவித்து, கடலோர வர்த்தகத்திற்கான ஒரு பிரத்தியேக சட்டப் பூர்வக் கட்டமைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டம் ஆனது 1958 ஆம் ஆண்டு வணிகக் கப்பல் போக்குவரத்து சட்டம் போன்ற முந்தையச் சட்டங்களில் உள்ள சில இடைவெளிகளை நிவர்த்தி செய்கிறது.
இந்தியக் கடலோர நீர்நிலைகளுக்குள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கப்பல்கள், படகுகள், பாய்மரக் கப்பல்கள் மற்றும் பல்வேறு இடங்களுக்கு இயங்கும் கடல் சார் கிணறு துளையிடும் அலகுகள் உள்ளிட்ட அனைத்து வகையான கப்பல்களையும் ஒழுங்குபடுத்த இந்த மசோதா முயல்கிறது.
இந்த மசோதாவானது, இந்திய நிறுவனங்களின் பெயரில் இயங்கும் வெளிநாட்டுக் கப்பல்களை ஒழுங்குமுறைப்படுத்தவும் முயல்வதோடு பல்வேறு விதிமீறல்களுக்கான அபராதங்களையும் குறிப்பிடுகிறது.
2014-15 ஆம் ஆண்டில் சுமார் 74 மில்லியன் டன்களாக இருந்த கடலோரச் சரக்குப் போக்குவரத்து ஆனது 2023-24 ஆம் ஆண்டில் சுமார் 162 மில்லியன் டன்களாக உயர்ந்து உள்ளதுடன் கடந்த பத்தாண்டுகளில் அது 119% அதிகரித்துள்ளது.