TNPSC Thervupettagam

கடலோரப் பகுதிகள் கனிம (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2023

August 6 , 2023 351 days 188 0
  • நாடாளுமன்றமானது, 2023 ஆம் ஆண்டு கடல் பகுதிகள் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்த மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
  • இது வெளிப்படைத் தன்மை, போட்டித் திறன் மற்றும் தனியார் துறை ஈடுபாட்டிற்கான நீடித்த காலம் ஆகியவற்றில் மேம்பாட்டினை அறிமுகப் படுத்தச் செய்வதன் மூலம் ஏல ஒதுக்கீடு செயல்பாட்டில் ஒரு மகத்தான மாற்றத்தினை அறிமுகப் படுத்துகிறது.
  • தனியார் துறை நிறுவனங்களுக்கு, போட்டி முறை ஏலம் அடிப்படையிலான ஏலத்தின் மூலம் இரண்டு வகையான செயல்பாட்டு உரிமைகள் வழங்கப்படும்.
  • பல்வேறு அணுக்கரு கனிமங்களுக்கான செயல்பாட்டு உரிமைகளைப் பொதுத் துறை நிறுவனங்களுக்கு (PSUs) பிரத்தியேகமாக என்று ஒதுக்குவதற்கும் இந்த மசோதா வழி வகுக்கிறது.
  • இந்தியப் புவியியல் ஆய்வு மையமானது கடலோரப் பகுதிகளில் உள்ள பின்வரும் கனிமங்களின் வளங்களுக்கான வரையறையினை வகுத்துள்ளது:
    • குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடற்கரையில் உள்ள பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தில் 1,53,996 மில்லியன் டன் சுண்ணாம்பு மண்.
    • கேரளக் கடற்கரையில் 745 மில்லியன் டன் கட்டுமான தர மணல்.
    • ஒடிசா, ஆந்திரப் பிரதேசம், கேரளா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலக் கடற்கரையில் உள் கண்டத் திட்டு மற்றும் மத்தியக் கண்டத் திட்டுப் பகுதிகளில் 79 மில்லியன் டன் கனரக கனிம இருப்புகள்.
    • கிழக்கு மற்றும் மேற்கு கண்ட விளிம்புகளில் பாஸ்போரைட் கனிமம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்