112 பணியாளர்களுடன், விரைவில் ஒரு பிரத்தியேக கடல் அமலாக்கப் பிரிவை தமிழ்நாடு உருவாக்க இருக்கின்றது.
இது கடலில் ரோந்து, மீன்பிடி விதிமுறைகளை அமல்படுத்துதல், சட்டவிரோத & அழிவு ஏற்படுத்தும் விதமான மீன்பிடித்தல் மற்றும் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றைத் தடுக்கும்.
இதற்கு தமிழ்நாடு காவல் துறையிலிருந்து நியமிக்கப் பட்ட ஒரு காவல் துறை கண்காணிப்பாளர் தலைமைத் தாங்குவார்.
1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை மாநிலத்தின் கடற்கரையோரங்களில் அமல்படுத்துவதில் இந்தப் பிரிவு மாநில மீன்வளத் துறைக்கு ஆதரவளிக்கும்.