TNPSC Thervupettagam

கடல் ஆமைத் திருவிழா - ஒடிசா

January 15 , 2019 2014 days 584 0
  • 2019-ஆம் ஆண்டின் ஜனவரி 13-ஆம் தேதி ஒடிசாவின் பூரி கடற்கரை தனது முதல் கடல் ஆமைத் திருவிழாவைக் கண்டுகளித்தது.
  • உலகின் ஆலிவ் ரெட்லி ஆமைகளின் எண்ணிக்கையில் பாதியையும், இந்தியாவின் கடல் ஆமைகளின் எண்ணிக்கையில் 90 சதவீதத்தையும் ஒடிசா கொண்டிருக்கின்றது.
பின்னணி
  • இந்திய நீர்நிலைகளில் 5 வகையான கடல் ஆமை இனங்கள் உள்ளன. அவையாவன : லெதர்பேக் (பாதிப்பிற்குள்ளானது), லாகர்ஹெட் (அருகி வரும் நிலை), ஹாக்ஸ்பில் (தீவிரமாக அருகி வரும் நிலை), கிரீன் (அருகி வரும் நிலை) மற்றும் ஆலிவ் ரெட்லி.
  • இந்தியாவில் கடல் ஆமைகள் 1972-ஆம் ஆண்டின் இந்திய வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்படுகின்றன.
  • இவை IUCN (International Union for Conservation of Nature) அமைப்பின் சிவப்புப் பட்டியலின்படி பாதிப்பிற்குள்ளானதாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது.
  • இந்த ஆமைகள் மற்றும் அவற்றின் பாகங்கள் மீதான சர்வதேச வர்த்தகம் CITES (Convention on International Trade in Endangered Species of Wild Fauna and Flora) என்ற அமைப்பின் பட்டியல்-I என்பதின் கீழ் தடை செய்யப்பட்டிருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்