மத்திய அரசானது, ஐந்தாவது ‘கடல் சார் மீன்பிடித் துறைக் கணக்கெடுப்பினைத் (2025) தொடங்கியுள்ளது.
இந்த மீன்பிடித் துறைக் கணக்கெடுப்பு ஆனது, தரவுகளைச் சேகரிக்கவும் சேகரித்தத் தரவுகளை நிகழ்நேரத்தில் செயல்முறையாக்குவதற்கும் கைபேசி செயலிகள் மற்றும் மெய்நிகர் சேவையகங்களைப் பயன்படுத்தி முதன்முறையாக மிகவும் முழுமையாக எண்ணிம முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்தியாவின் கடற்கரையோரத்தில் உள்ள சுமார் 1.2 மில்லியன் குடும்பங்களில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
ஒன்றிய அமைச்சகம் ஆனது, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை என்று மீன்பிடித் துறைக் கணக்கெடுப்பை நடத்துகிறது.
மக்களின் நலனுக்காக இந்தத் துறையுடன் தொடர்புடைய எதிர்காலக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க இது உதவுகிறது.