TNPSC Thervupettagam

கடல் சார் மீன்பிடித் துறைக் கணக்கெடுப்பு 2025

November 26 , 2024 37 days 53 0
  • மத்திய அரசானது, ஐந்தாவது ‘கடல் சார் மீன்பிடித் துறைக் கணக்கெடுப்பினைத் (2025) தொடங்கியுள்ளது.
  • இந்த மீன்பிடித் துறைக் கணக்கெடுப்பு ஆனது, தரவுகளைச் சேகரிக்கவும் சேகரித்தத் தரவுகளை நிகழ்நேரத்தில் செயல்முறையாக்குவதற்கும் கைபேசி செயலிகள் மற்றும் மெய்நிகர் சேவையகங்களைப் பயன்படுத்தி முதன்முறையாக மிகவும் முழுமையாக எண்ணிம முறையில் மேற்கொள்ளப்படுகிறது.
  • இந்தியாவின் கடற்கரையோரத்தில் உள்ள சுமார் 1.2 மில்லியன் குடும்பங்களில் இந்தக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும்.
  • ஒன்றிய அமைச்சகம் ஆனது, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை என்று மீன்பிடித் துறைக் கணக்கெடுப்பை நடத்துகிறது.
  • மக்களின் நலனுக்காக இந்தத் துறையுடன் தொடர்புடைய எதிர்காலக் கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்க இது உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்