TNPSC Thervupettagam

கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருள்

March 21 , 2019 2077 days 673 0
  • சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் எரிபொருளை உற்பத்தி செய்யும் வழிமுறையை ஸ்டான்போர்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
  • இவர்கள் கடல் நீரிலிருந்து ஹைட்ரஜன் வாயு மற்றும் ஆக்ஸிஜன் வாயுக்களைத் தனித்தனியாக பிரிப்பதற்கான ஒரு புதிய வழியைக் கண்டறிந்துள்ளனர்.
  • மேலும் இந்தச் செயல்முறையானது சுவாசிக்கக்கூடிய ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது. எனவே முக்குளிப்பவர்கள் அல்லது நீர்மூழ்கி வீரர்கள் இந்த வகையான கருவிகளை கடலிற்கு எடுத்துச் செல்வதால் சுவாசிக்கக் கூடிய காற்றிற்காக அவர்கள் நீரின் மேற்பரப்பிற்கு வராமல் இந்தக் கருவிகளைப் பயன்படுத்தி ஆக்ஸிஜனை உற்பத்தி செய்து கொள்கின்றனர்.
  • ஹைட்ரஜன் வாயு கார்பன் டை ஆக்ஸைடு உமிழ்வுகளை ஏற்படுத்தாததால் எரிபொருள்களுக்கு இது ஒரு கவர்ச்சிகர முறையாகும்.
  • நீர் மூலக்கூறுகள் மின்சாரத்துடன் கூடிய ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவையாக பிரிக்கப்படுவது எலக்ட்ரோலைசிஸ் எனப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்