“கடல் பகுதி வான்மேகத்தினைப் பிரகாசமாக்குதல்” என்பது கடலின் சில பகுதிகளை தீவிர வெப்பத்திலிருந்துப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக கருதப் படுகிறது.
இதில் கடல்நீரை வானத்தில் தெளிக்கத் தண்ணீர் பீரங்கிகள் பயன்படுத்தப் படுகின்றன.
இது பிரகாசமான, வெண்மையான மேகங்களை உருவாக்குகிறது.
இந்தத் தாழ்மட்ட கடல் மேகங்கள் சூரிய ஒளியை கடலின் மேற்பரப்பில் இருந்து பிரதிபலிக்கச் செய்து, மோசமான பருவநிலை மாற்றத்திலிருந்து கடல்நீரில் உள்ள கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கிறது.
மாதிரி ஆய்வுகளின் முடிவுகள் இந்த முறையின் பயன்பாட்டிற்கு ஊக்கமளிக்கக் கூடியதாக உள்ள நிலையில், இது பவளப் பாறை பரவலில் ஏற்படும் சரிவை தாமதப் படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது.
பிரிட்டனைச் சேர்ந்த மேக இயற்பியலாளர் ஜான் லாதம், முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் பூமியின் ஆற்றல் சமநிலையை மாற்றுவதன் மூலம் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாக வான் மேகத்தினைப் பிரகாசமாக்குதல் என்ற முறையை முன்மொழிந்தார்.