TNPSC Thervupettagam

கடல் பகுதி வான்மேகத்தினைப் பிரகாசமாக்குதல்

November 20 , 2023 242 days 174 0
  • “கடல் பகுதி வான்மேகத்தினைப் பிரகாசமாக்குதல்” என்பது கடலின் சில பகுதிகளை தீவிர வெப்பத்திலிருந்துப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக கருதப் படுகிறது.
  • இதில் கடல்நீரை வானத்தில் தெளிக்கத் தண்ணீர் பீரங்கிகள் பயன்படுத்தப் படுகின்றன.
  • இது பிரகாசமான, வெண்மையான மேகங்களை உருவாக்குகிறது.
  • இந்தத் தாழ்மட்ட கடல் மேகங்கள் சூரிய ஒளியை கடலின் மேற்பரப்பில் இருந்து பிரதிபலிக்கச் செய்து, மோசமான பருவநிலை மாற்றத்திலிருந்து கடல்நீரில் உள்ள கடல் வாழ் உயிரினங்களை பாதுகாக்கிறது.
  • மாதிரி ஆய்வுகளின் முடிவுகள் இந்த முறையின் பயன்பாட்டிற்கு ஊக்கமளிக்கக் கூடியதாக உள்ள நிலையில், இது பவளப் பாறை பரவலில் ஏற்படும் சரிவை தாமதப் படுத்தலாம் என்று குறிப்பிடுகிறது.
  • பிரிட்டனைச் சேர்ந்த மேக இயற்பியலாளர் ஜான் லாதம், முதன்முதலில் 1990 ஆம் ஆண்டில் பூமியின் ஆற்றல் சமநிலையை மாற்றுவதன் மூலம் புவி வெப்பமடைதலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாக வான் மேகத்தினைப் பிரகாசமாக்குதல் என்ற முறையை முன்மொழிந்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்