தஞ்சாவூரின் மனோராவில் சர்வதேச கடல் பசு/ஆவுளியா வளங்காப்பு மையத்தினை (IDCC) நிறுவுவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளை வரவேற்பதாக வனத்துறை அறிவித்து உள்ளது.
IDCC ஆனது TN-SHORE (தமிழ்நாடு - பெருங்கடல் வளங்கள் மற்றும் பெருங்கடல் சார் பொருளாதாரத்தினை நிலையான முறையில் பயன்படுத்துதல்) முன்னெடுப்பின் கீழ் நிறுவப்பட உள்ளது.
இது "கடல் பசு" என்றும் அழைக்கப்படுகின்ற கடல் வாழ் பாலூட்டியான "அருகி வரும்" டுகோங் இனத்தையும் பால்க் விரிகுடாவில் அதன் வாழ்விடத்தையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.