இந்த உலகளாவிய முன்னெடுப்பானது (GEBCO - General Bathymetric Chart of the Oceans) ஜப்பானின் இலாப நோக்கமற்ற அமைப்பான நிப்பான் அமைப்பு மற்றும் பெருங்கடலிற்கான ஆழத்தை அளவிடுவதற்கான தலைமை வரைபட அமைப்பு ஆகியவற்றிற்கு இடையேயான ஒரு கூட்டுத் திட்டமாகும்.
GEBCO கடல் பரப்பு 2030 என்ற திட்டத்தின் நோக்கம் கடல் பரப்பு முழுவதையும் அளவிடுவதாகும்.
இது ஏறத்தாழ உலகின் மொத்தக் கடல் பரப்பில் 5ல் 1 பங்கை அளவிட்டு முடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதன் மூலம் இது தனது சமீபத்திய தொகுப்பில் ஆழத்தை அளவிடுவதற்கான புதிய தரவில் 1.45 கோடி சதுர கிலோ மீட்டரைச் சேர்த்துள்ளது.